Maalaimalar
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்
6 அணிகள் இடையிலான 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த அரைஇறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை பந்தாடி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஷிலானந்த் லக்ரா, தில்பிரீத்சிங் தலா 2 கோலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், அன்கத் பிர் சிங், விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். ஜப்பான்…