Indian Express Tamil
GOLD RATE TRODAY: ஒரே நாளில் இவ்வளவு உயர்வா? ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை... நகைப்பிரியர்களுக்கு ஷாக்
GOLD RATE TRODAY: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ரூ.13,385க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின்…