Polimer News
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இன்று (நவம்பர் 5) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் நவம்பர் 8ஆம் தேதி இரவு வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வரும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்கத் தவறியவர்கள் கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்தி நவம்பர் 8ஆம் தேதி இரவுக்குள் வ…