உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’ரூ.2 கோடி லஞ்ச புகார்’; ஞானேஷ்குமார் மீது பதிவாகிறதா புதிய வழக்கு?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது, ரூ.2 கோடி லஞ்சம் தொடர்பான வழக்குப் பதிவு செய்யக் கேரள அரசு அனுமதியளித்துள்ளது. தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், கடந்த 2006 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றி வந்தார். அப்போது, திருவனந்தபுரம் - கோட்டயம் இடையே சாலை விரிவாக்கப்பணியும் நடைபெற்றது. இந்த பணியின் போது சாலை ஒப்பந்தத்திற்கான ரசீது வழங்க, ஞானேஷ்குமார் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாகச் சாலை ஒப்பந்ததாரர் புகார் அளித்திருந்தார். இந்த புகார் நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகார் சம்பந்தமான வழக்கை விசாரணை செய்ய…