Hindu Tamil Thisai
டெட் தேர்வு வழக்கு நிலுவை: 4 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் பரிதவிப்பு
கரூர்: டெட் தேர்வு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, ஏற்கெனவே பணியில் உள்ள 55 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு…