Nakkheeran
முதல்வர் விஜய்க்காக தயாரான பாமணி அரசு இல்லம்; இன்று நேரில் ஆய்வு!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பொதிகை வளாகத்தில் உள்ள அரசு இல்லமான பாமணி இல்லத்தை முதல்வர் விஜய் இன்று முதல் தனது முகாம் அலுவலகமாக பயன்படுத்துகிறார். நீலாங்கரை இல்லத்தில் இருந்து முதல்வர் விஜய் நாள்தோறும் தலைமைச் செயலகம் வந்து செல்லும் போது அவருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதை தடுப்பதற்காக, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பாமணி இல்லத்தை முதல்வர் விஜய் இன்று முதல் முகாம் அலுவலகமாக பயன்படுத்தவுள்ளார். முதல்வரின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஏற்கெனவே புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று அந்த இல்லத்தை முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். இனி வரும் காலங்களில், முதல…