Hindu Tamil Thisai
ஒருபுறம் தட்டுப்பாடு, மறுபுறம் அலட்சியம்... கிடங்குகளில் பல லட்சம் டன் அரிசி முடக்கம்
திருச்சி: தமிழகத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் டன் அரிசி, யாருக்கும் பயன்படாமல் வீணாகும் நிலையில் உள்ளது. மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதும் நெல், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப வழங்குகிறது. இதில் அரிசியை…