Nakkheeran
எம்.ஜி.ஆருடன் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
எம்.ஜி.ஆர் நடிப்பில் 1973ஆம் ஆண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மெட்டா ரூங்ராட்(83). படத்தில் இடம் பெற்ற ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ’ என்ற பாடலில் எம்.ஜி.ஆருடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தாய்லாந்தை சேர்ந்த நடிகை. அங்கு 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்த இவர் தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். இவரை ‘ஆசியாவின் கருப்பு முத்து’ என்றும் ரசிகர்கள் அழைத்து வந்தனர். தாய்லாந்தில் வசித்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பா…