Indian Express Tamil
மர அலமாரியில் ஒட்டிக் கொண்டிருக்கும் எண்ணெய் அழுக்கு... பாத்திரம் கழுவும் லிக்விட் முதல் பேக்கிங் சோடா வரை; இப்படி யூஸ் பண்ணுங்க
சமையலறையை எவ்வளவுதான் தினமும் சுத்தம் செய்தாலும், சமையல் அறையில் உள்ள அலமாரிகளில் எண்ணெய் பசை படிவதைத் தவிர்க்க முடியாது. குறிப்பாக, அடுப்புக்கு அருகில் இருக்கும் மர அலமாரிகளில் எண்ணெய் துளிகள், மசாலாப் பொருட்களின் கறைகள், சமையலின்போது வெளியாகும் ஆவி மற்றும் தூசி ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து நாளடைவில் பிசுபிசுப்பான அழுக்காக மாறிவிடும். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தெரியும் இந்த எண்ணெய் பசை, நாளடைவில் கெட்டியாகி அலமாரியின் தோற்றத்தையே மாற்றிவிடும். இதனைச் சுத்தம் செய்யும்போது கடினமான பிரஷ், அதிக ரசாயனம் அல்லது அதிக தண்ணீரைப் பயன்படுத்தினால் மரத்தின் மேற்பரப்பில் உள்ள பூச்சு பாதிக்கப்படலாம். எனவே, மர அல…