Nakkheeran
'சிலை கடத்தல் மன்னனுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்'-வழக்கறிஞர் ராம்சங்கர் பரபரப்பு பேட்டி
சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். மேலும், இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, தமிழக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயிலில் தொன்மையான சிலைகள் திருட்டு மற்றும் கடத்தல் வழக்கில் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட…