Nakkheeran
‘அரசகுமார் பொய் கூறி வசூல் செய்துள்ளார்’ - அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே அன்பில் மகேஸ் அளித்த ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 2ஆம் தேதி நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,…