Indian Express Tamil
‘ஏ.ஐ உருவாக்கியதை நான் படிக்க மாட்டேன்’: கோடேடி சி.இ.ஓ-வின் கண்டிப்பான உத்தரவு
வேலை செய்யும் இடத்தில் ஏ.ஐ மூலம் உருவாக்கப்படும் உரைகள் மற்றும் அறிக்கைகள் குறித்து கோடேடி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சி.இ.ஓ) அமன் பூடானி கடுமையான கட்டுப்பாடு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் எழுதப்பட்டது போல் தெரியும் எந்தவொரு ஆவணத்தையும் தான் படிக்க மறுப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ஊழியர்கள் தொழில்நுட்பத்தை நம்பியிருக்காமல் தங்களது கருத்துகளைச் சொந்தமாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டுள்ளார். ஆங்கிலத்தில் படிக்க: பிசினஸ் இன்சைடர் இதழுக்கு அளித்த பேட்டியில் அமன் பூடானி பேசுகையில், ஒரு ஆவணத்தை உருவாக்குபவர் அதைச் சொந்தமாக எழுதுவதற்கு முயற்சி செய்யாதபோது, அ…