உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தூய்மைப் பணியாளரின் 3 மாத சம்பளத்தை நிறுத்திவைத்த அதிகாரிகள்

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தாளநத்தம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் வேலுமணி என்பவர், மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து கண்ணில் கறுப்புத் துணி கட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரது தந்தைக்கு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டின் கட்டுமானப் பணி பாதியில் நிற்பதால், அரசு வழங்கிய தொகையைத் திருப்பித்தரும்படி அதிகாரிகள் நிர்பந்தித்ததாகவும், திருப்பிச் செலுத்தாததால் வேலுமணியின் சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி நேரில் வந்து வேலுமணியிடம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த…