Indian Express Tamil
6 கல்லூரிகளில் உள்ள 7 துறைகளுக்கு பி.எச்.டி ஆய்வு மைய அந்தஸ்து: சென்னை பல்கலை. முடிவு
சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இதில் பல்வேறு கல்லூரிகளில் உள்ள 7 துறைகளுக்கு ஆய்வு மைய அந்தஸ்து வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் அந்தத் துறைகளில் மாணவர்கள் முனைவர் (Ph.D) பட்டப் படிப்பைத் தொடர வழிவகை பிறக்கிறது. பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுக்கள், கடந்த டிசம்பர் 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலக்கட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வறிக்கைகளின்படி, கல்லூரிகளில் உள்ள நூலக வசதிகள், புத்தகங்கள், இணையதள வசதிகள், அறிவியல் துறைகளுக்கான ஆய்வக உபகரணங்கள் மற்றும் சம்பந்தப…