Indian Express Tamil
காவிரி நீரைத் திறக்க கர்நாடகா மறுப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடு; விரைந்து விசாரிக்க ஒப்புதல்
காவிரி நீரைத் திறந்துவிடக் கர்நாடக அரசு மறுப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை (05.11.2026) அவசர முறையீடு செய்துள்ளது. நிலுவையில் உள்ள காவிரி விவகாரம் தொடர்பான மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமுறைமையிலான அமர்வு முன்பாகத் தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் பி. கருணாகரன் இந்த முறையீட்டைச் செய்தார். அக்டோபர் 23-ம் தேதி முதல் கர்நாடக அரசு தமிழகத்திற்குரிய காவிரி நீரை வெளியிடாமல் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு அ…