Daily Thanthi
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா 9-ந் தேதி தொடங்குகிறது
சிக்கல், பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. சிங்காரவேலவர் கோவில் நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சஷ்டி விழாவில் முருகன், வேல் நெடுங்கன்னி அம்மனிடம், வேல் வாங்கும்போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும்…