IBC Tamil
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி: பெண் கைது
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்த நிலையில், அவருக்கு எதிராக வெலிசறை நீதவான் நீதிமன்றத்தினால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராகம காவல் நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (04.11.2026) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ராகம காவல்த...