Daily Thanthi
மயிலாப்பூர்: 54 சவரன் நகை, ரூ.15 லட்சம் திருடிய வீட்டு பணிப்பெண் கைது
சென்னை, மயிலாப்பூரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வீட்டில், 15 வருடங்களாக வேலை செய்து வந்த பெண் ஒருவர் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நம்பிக்கையான வேலைக்காரி சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா. ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரியான இவரது வீட்டில், மணிமேகலை (வயது 53) என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து…