Indian Express Tamil
கோவையில் கனமழை: வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கோவையில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வழிப்பாதைகள் பணியில் மாநகராட்சி நிர்வாகம் அலச்சியமாக செயல்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவையில் நேற்று பெய்த கன மழை காரணமாகத் உக்கடம், கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், துடியலூர், கவுண்டம்பாளையம் மற்றும் கணபதி ஆகிய பகுதிகளில் பிரதான சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியதுடன், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை பெய்த கன மழையினால் தாழ்வான பகுதிகளில…