உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’4 வயது குழந்தையுடன் பரிதவிக்கும் குடும்பம்’; நடவடிக்கை எடுக்குமா மத்திய, மாநில அரசுகள்?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்த வீரமணி (31), தனது குடும்பத்தின் நிதி நெருக்கடியைப் போக்கவும், தனது மனைவி மற்றும் நான்கு வயது மகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் இஸ்ரேலுக்குக் கட்டுமானப் பணிக்குச் சென்றார். துரதிர்ஷ்டவசமாக, கடந்த மாதம் 27-ஆம் தேதி பணியின் போது ஒரு ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு, அவரது இளம் மனைவி, சிறு குழந்தை மற்றும் முதிய பெற்றோரை நிலைகுலையச் செய்துள்ளது. "அப்பா எப்போது திரும்பி வருவார்?" என்று அந்த நான்கு வயதுக் குழந்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பது, அந்தக் குடும்பத்தினரை மனவேதனையில் ஆழ்த்தியதோடு, அதற்குப்…