Vikatan
திருவண்ணாமலை: நந்தி வாகனத்தில் ஏறி தூய்மைப் பணி; ஊழியர் சஸ்பெண்ட்; தீயணைப்புத் துறையினரும் வருத்தம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த நிலையில், திருக்கோயிலின் கோபுரங்களைச் சுத்தம் செய்து தருமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதால், தீயணைப்புத் துறையினர் நேற்று முன்தினம் (3-ம் தேதி) தண்ணீரைப் பீய்ச்சியடித்து கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீயணைப்பு வாகனம், ஏணி போன்றவற்றை பயன்படுத்தாமல், கோடிக்கணக்கான பக்தர்களின்…