Hindu Tamil Thisai
கண்காட்சி: சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் ‘தக்ஷணம்’
கலையும் கலை சார்ந்த வாழ்வுமாக இருக்கிற கலைஞர்களைக் கொண்டாடுவது சிறப்பானது. அதுவே, பல்வேறுபட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடித் தங்களது படைப்புகளை முன்வைக்கும்போது வேறுபட்ட பண்பாடுகளின் பின்னணியில் அமைந்த கலைச்செழுமை மிளிரும். அப்படியொன்றாக அமைந்துள்ளது, டெல்லியில் நடைபெற்றுவரும் ‘தக்ஷணம்’ சிற்பக் கண்காட்சி. கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று மத்தியக் கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் இதனைத் தொடங்கி வைத்தார்…