Polimer News
ரயில்வே கேட்டை உடைத்த டாட்டா ஏஸ் வாகனம் – கேட் கீப்பருக்கு உதவிய இளைஞர்கள்!
திருவாரூர் அருகே சிங்களாஞ்சேரி கிராமத்தில் உள்ள ரயில்வே கேட்டை தானியங்கி முறையில் மூடும்போது அதிவேகத்தில் வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதி இரண்டு துண்டாக உடைந்தது. இதனால் ரயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக சமயோசிதமாக செயல்பட்ட கேட் கீப்பர் போக்குவரத்தை நிறுத்தி ரயில் செல்லும் வரை யாரும் செல்லாதவாறு தடுத்து அப்பகுதியில் அசம்பாவிதம் நிகழாமல் தடுத்து நிறுத்தினார். ரயில் சென்ற பின் உடைந்த ரயில்வே கேட்டை முழுமையாக திறக்க முடியாமல் இருந்ததால் இரண்டு பக்கமும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தனி ஒரு ஆளாக சமாளித்து வந்த கேட் கீப்பருக்கு உள்ளூர் இளைஞர்கள் கைகொடுத்தனர். ரயில்வே கேட…