Nakkheeran
சர்ச்சையான விபத்து; ரயிலில் அடிபட்டு புலி சாவு - சிக்கலில் வனத்துறை!
தென்காசி மாவட்டத்தில் கேரளா எல்லையை பகுதியை ஒட்டியுள்ள செங்கோட்டை - பகவதிபுரம் இரயில் நிலையம் ஆரியங்காவை ஒட்டியுள்ளது. இந்த ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பூலாங்குடியிருப்பு பகுதியில், நேற்று அதிகாலை (நவம்பர்-4) சுமார் 3மணி அளவில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண் புலி ஒன்று பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது. அத்தனை அடர்வனமான அந்த பகுதியில் புலி அடிபட்டு இறந்ததை சட்டென கவனித்து விட்ட ரயில் இன்ஜின் டிரைவர், வண்டியை நிறுத்தி விட்டு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் மற்றும் வனக்குழுவி…