உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வீடியோ ஆதாரம் உள்ளது vs எங்கேயும் தப்பியோட மாட்டார்: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு மீது நீதிமன்றத்தில் காரசார வாதம்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி வரை லஞ்ச வசூல் செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீது சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இருதரப்பு வழக்கறிஞர்களும் இடையே கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. லஞ்சப் பணம் வீட்டிற்குச் சென்றதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகக் காவல் துறை அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என அன்பில் மகேஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்…