Indian Express Tamil
ஆக்கிரமிப்புகளால் முடங்கிய தீபாவளி வியாபாரம்: திருச்சியில் நவ.7 முழு கடையடைப்புப் போராட்டம்
தீபாவளி பண்டிகை கால ஆக்கிரமிப்புகளால் திருச்சியின் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வரும் நவம்பர் 7-ம் தேதி என்.எஸ்.பி. சாலையில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைத்து, சுமார் 10,000 வணிகர்களுடன் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரித்துள்ளது. திருச்சி அண்ணாமலை நகர், புதிய கரூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள பேரமைப்பின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜுலு இந்த அறிவிப்பை வெளியிட்டார். செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த விவரங்கள்: "2026-ம் ஆண்டு தீபாவளி ப…