உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கோவையில் நகைக் கடைகளில் அதிரடி சோதனை; ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

கோவையில் ஹால்மார்க்கிங் தனித்துவ அடையாள எண் (HUID) இல்லாமல் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்க நகைகளை இந்திய தர நிர்ணய அமைவன (BIS) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நகைக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், விதிமீறலில் ஈடுபட்டால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்வதற்கும், நுகர்வோருக்கு தரமான நகைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தங்க நகைகளுக்கு ஹால்மார…