உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளிக்கு ரூ.100 இருந்தால் போதும்; 10 வகையான காய்கறிகள் வாங்கலாம்; கோவையில் தொடங்கிய புதிய திட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கிப் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவையில் இந்தத் திட்டத்தின் கீழ் காய்கறித் தொகுப்பு விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்தச் சிறப்புத் தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், எலுமிச்சை, இஞ்சி, தேங்காய் என அன்றாட சமையலுக்குத் தேவையான 10 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரே தொகுப்பாக ரூ.100-க்கு விற்பனை…