Daily Thanthi
மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: உறவினரை அடித்துக் கொன்ற தொழிலாளி கைது
வாணாபுரம், வெறையூர் அருகே செங்கல் சூளை தொழிலாளி இரும்புக்கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவருடன் வேலைபார்க்கும் உறவினரான சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். செங்கல் சூளை தொழிலாளி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் பாண்டியன் (வயது 30). இவரது மனைவி பிரியதர்ஷினி (21). திருவண்ணாமலையை அடுத்த வெறையூர் அருகே உள்ள பெருமணம் பகுதியில் செந்தில்…