Nakkheeran
‘ஹே தள்ளாடும் தவளை தொத்தா...’ - ‘ஜெயிலர் 2’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக வசூலில் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 800 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இதனிடையே தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு இப்படம் மூலம் சாத்தியமாகும் என தமிழ் சினிமா ஆர்வலர்களும் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். குடும்பங்கள் கொண்டாடும் கேங்க்ஸ்டர் படமாக இப்படம் அமைந்திருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. நெல்சன் இயக்கியிருந்தார். இப்படத்தில…