Polimer News
பட்டப்பகலில் ரவுடியை வெட்டி வீசிசென்ற மர்ம கும்பல்..
சென்னை அடையாறில் பட்டபகலில் ரவுடியை கொலை செய்து விட்டு மர்மகும்பல் தப்பிச்சென்றது. மைலாப்பூரை சேர்ந்தவர், சி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி மைத்ரேயன் (30), இவர் அடையாறு, இந்திரா நகர் மெயின் சாலை( வாட்டர் டேங்க் ) அருகே நின்று கொண்டிருந்த போது, சுற்றி வளைத்த மர்ம கும்பல் ஒன்று மைத்ரேயனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. அந்த பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து கொலையாளிகளை தேடிவரும் போலீசார் , ரவுடி மைத்ரேயனின் கொலைக்காண காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர் .