உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ATM-ல் கொள்ளை முயற்சி.. அலாரம் ஒயரை துண்டித்தபோதிலும் அலர்ட் மெசேஜ்ஜால் சிக்கிய திருடன்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியை அடுத்த பூதலூரில், IOB ATM-ல், அலாரம் ஒயரை துண்டித்து விட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருடன் கையும் களவுமாக பிடிபட்டான். அலாரம் வயரை துண்டித்துவிட்டு, ஏடிஎம் மெஷினை உடைத்தபோது, வங்கியின் தலைமையகத்திற்கு அலர்ட் மெசேஜ் சென்றுள்ளது. வயர் துண்டிக்கப்பட்ட நிலையில், அலராமும் ஒலித்ததால், ஏடிஎம் அருகில் உள்ள வணிகர்கள், கொள்ளையனை உள்ளே வைத்து ஏடிஎம்-ஐ மூடிவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார், ஏடிஎம் கொள்ளையனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கொள்ளையன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.