Polimer News
திமுக ஆட்சியில் பணத்திற்காக குழந்தைகள் பாதுகாப்பில் சமரசம்.. - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்
பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டு போலிச் சான்றிதழ் கொடுத்து கொள்ளையடித்த ஆட்சி திமுக ஆட்சி என சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். கும்பகோணம் தீவிபத்துச் சம்பவத்தை தொடர்ந்து கொண்டு வரப்பட்ட விதிகளை வைத்து திமுக ஆட்சியில் பணம் பார்த்ததாகவும், குழந்தைகளுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை எனக் கூறிவிட்டு, தீத்தடுப்பு, பள்ளி வாகனங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு விதிகளை காற்றில் பறக்கவிட்டு அன்பில் மகேஷ் தலைமையிலான கும்பல் 5000 பள்ளிகளில் வசூல் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.