Daily Thanthi
நாகர்கோவில்-மும்பை ரெயிலில் பெட்டிக்குள் ஒழுகிய மழைநீர்: பயணிகள் அவதி
சேலம், நாகர்கோவில்- மும்பை லோகமான்ய திலக் டெர்மினல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16340) நேற்று வழக்கம் போல் இயக்கப்பட்டது. இந்த ரெயில் சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் அருகில் வந்த போது பலத்த மழை பெய்தது. அப்போது ரெயிலின் மேற்கூரை வழியாக மழைநீர் பெட்டிக்குள் ஒழுகியது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். மேலும், அங்கிருந்த மின்சார பலகை மீது தண்ணீர் வடிந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதேபோல் கழிவறைக்கு அருகில்…