Nakkheeran
'தவெக சொந்த நிர்வாக தவறுகளால் தானாகவே வீழும்...'- காரணங்களை அடுக்கும் இள.புகழேந்தி
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை மாற்று முகாமிற்கு இழுக்கப் பேரங்கள் நடப்பதாகத் தவெக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தொடர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர் இத்தகைய குதிரை பேரக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள பின்னணி குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் இள.புகழேந்தி விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "தவெக அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது, எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்படுவதாகவும், இந்த ஆட்சியை இன்னும் சில மாதங்கள்தான் நீட…