உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அழியும் நிலையில் இருந்த மலைக்கோட்டை தெப்பக்குளம் இனி புதிய பொலிவுடன்: ரூ.25 கோடியில் மெகா திட்டம்

திருச்சியின் முக்கிய அடையாளமாகத் திகழும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தெப்பக்குளத்தை ரூ.25 கோடி செலவில் நவீன முறையில் அழகுபடுத்தும் திட்டத்திற்கான வடிவமைப்பு வரைபடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் விரைவில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமான இந்த தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதியைச் சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்பு திட்டமிட்டிருந்தது. இதற்காகக் குளமும் தூர்வாரப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போ…