Nakkheeran
குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக எம்.எல்.ஏ.விடம் தொழிலாளர்கள் புகார்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரியிடம், 100 நாள் வேலைத் திட்டத்தில் குறைந்த அளவே ஊதியம் கிடைப்பதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, புவனகிரி அருகே உள்ள அருண்மொழிதேவன் ஏரியை ஆய்வு செய்யச் சென்றார். அப்போது ஆயிபுரம் கிராமத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியில் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனைப் பார்த்த அவர், வாகனத்திலிருந்து இறங்கி தொழிலாளர்களிடம் சென்று, தினசரி ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா? எனக் கேட்ட…