Indian Express Tamil
திருவையாறு அருகே கோயில் நிலத்தில் அமைக்கப்பட்ட பெரியார் சிலை; 4 வாரங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், கண்டியூரில் உள்ள அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை 4 வாரங்களுக்குள் பாதுகாப்பாக அகற்றி, வேறு பொருத்தமான இடத்தில் நிறுவுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் நிலத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டிருப்பது தொடர்பாக ராம ரவிகுமார் என்பவர் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் பரிந்துரையின் அடிப்படையில், கோயில் வளாகப்…