Nakkheeran
“வெட்கக்கேடு... இதுதான் மாற்றமா? - முதல்வர் ஆணைக்கு சீமான் எதிர்ப்பு
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அண்மையில் முதல்வர் விஜய் ஆணை வெளியிட்டிருந்தார். இது திரைத்துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதற்காக முதல்வர் மற்றும் அமைச்சர் ராஜ்மோகனுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு சங்கம் எனப் பலரும் நன்றி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் முதல்வரின் இந்த உத்தரவிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய திரைப்படங்கள்…