Nakkheeran
டிரம்ப்புக்கு விழுந்த அசுர அடி: குடியரசுக் கட்சி சரிந்ததன் பின்னணி என்ன?-ஐநா கண்ணன் அலசல்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் நடத்தப்பட்ட இடைக்காலத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த உலக அரசியலையும் உலுக்கியுள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த மிக முக்கியத் தேர்தலில், அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சி மிகப்பெரிய வரலாற்றுப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆளும் தரப்பிற்கு எதிராக எழுந்துள்ள இந்த அதிரடித் தீர்ப்பு, அமெரிக்க வாக்காளர்களின் மனநிலை மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் மீதான அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து நக்கீரன் டிவியின் சிற…