உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி கொண்டாட்டம் ஸ்டார்ட்: நவ. 9 விடுமுறை, நவ. 21 ஈடு செய்ய வேலை நாள்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் அடங்கிய வங்கி நிறுவனங்களுக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9-ஆம் தேதி பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உள்துறை கீழ்-செயலாளர் எம். வி. ஹிரான் வெளியிட்டார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நவம்பர் 21-ஆம் தேதி வேலை நாளாக இயங்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.