Nakkheeran
மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு நேர்ந்த சோகம் : முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு!
சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு என்ஜின் பழுதடைந்து ஆந்திரப் பிரதேச மாநில கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 29.10.2026 அன்று விசைப்படகில், மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற கா. பக்கிரிசாமி (எ) சூர்யா (வயது 49), ம. குப்பன் (வயது 48), சே. மோகன் (வயது 47), கா. ராஜேஷ் (வயது 52), ஆ.முருகன் (வயது 48), வா. குப்புசாமி (வயது 58), சி. விஜயகாந்த் (வயது 44), அ. அரவிந்…