உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

செந்தில் பாலாஜி வழக்கு: விரைந்து முடிக்க தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை; 3 சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம்

அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை விரைந்து நடத்துவதற்காக தமிழக அரசு மூன்று சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. கடந்த 2011 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, அப்பகுதியில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இதர பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதாகக் கூறி பலரிடம் பணம் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த…