Dinamani
பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!
தேனி மாவட்ட சிறையில் கைதிகள் தப்பியோடிய விவகாரம் குறித்து சிறைத்துறை செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் ஒரே அறையில் இருந்த 17 கைதிகள் காவலர்களை அடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வரும் நிலையில், 4 கைதிகளை காவல்துறையினர் மீண்டும் கைது…