Indian Express Tamil
நள்ளிரவில் பூமிக்குள் புதைந்த கார்; கோவையில் மழையால் நேர்ந்த அதிர்ச்சி
கோவை, பட்டணம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டு இருந்த கார் நள்ளிரவில் திடீரென மண்ணுக்குள் புதைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து கொட்டித் தீர்த்து வரும் வடகிழக்குப் பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பல இடங்களில் மண் சரிவு மற்றும் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை பட்டணம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், வழக்கம் போல் தனது காரை நேற்றிரவு வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு உறங்கச் சென்று உள்ளார். நள்ளிரவில் அப்பகுதியில் பெய்த கன மழையின் போது, திடீரென அந்…