Nakkheeran
வீட்டை ஜப்தி செய்ய வந்த தனியார் நிதி நிறுவனம்; விரக்தியில் கணவன், மனைவி விபரீத முடிவு!
மேட்டூர் அருகே, கடன் பாக்கிக்காக தனியார் நிதி நிறுவனம் ஊழியர்கள், வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் விரக்தியில் கணவன், மனைவி இருவரும் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (56). இவர், தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி, மஞ்சுளா (42). கடந்த 2017ஆம் ஆண்டு, ஹிந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில், குபேந்திரன் 28 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் பெற்று, புதிதாக வீடு கட்டினார். இந்நிலையில் திடீரென்று அவருடைய வேலை பறிபோனது. இதனால் வீட…