Nakkheeran
திமுக நிர்வாகிகளுக்குத் தீபாவளி பரிசு; சேலத்தில் கோலாகலம்!
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக விஜயகுமார் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி மாலை, திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்ஆர்.சிவலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஏற்பாட்டின் பேரில், ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி வேட்டி, சேலை மற்றும் இனிப்பு, காரம் ஆகியவற்றை எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி., வழங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஹரி, அய்யாதுரை,…