உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கூட்டுறவு அதிகாரி வீட்டில் முகமூடி நபர்கள் 45 பவுன் கொள்ளை!

சேலம் அருகே, கூட்டுறவுத்துறை அதிகாரி வீட்டில் முகமூடி நபர்கள் பூட்டை உடைத்து 45 நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சேனாதிபதி. இவர், சேலம் மாவட்டக் கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சபினாகுமாரி. இவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில்வே துறையில் பணியாற்றுகிறார். இதனால் வீட்டில் சேனாதிபதி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி சேனாதிபதி அலுவலகப் பணி தொடர்பாக சென்னைக்குச் சென்றுவிட்டார். அன்று இரவு அவர் தனது செல்போ…