IBC Tamil
நுவரெலியாவில் இருந்து தேசிய அணிக்கு - தமிழ்ச் சிறுவன் ருக்சன் சாதனை!
AFC U17 ஆசியக் கிண்ணம் உஸ்பெகிஸ்தான் 2027 தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை தேசிய U17 கால்பந்து அணி இன்று லாவோஸ் நோக்கிப் பயணமானது. இந்த அணியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிறுவன் ருக்சன் இடம்பெற்றுள்ளமை மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. மலையக மண்ணிலிருந்து தேசிய அணி வரை உயர்ந்துள்ள ருக்சனின் இந்த சாதனை, நுவரெலியா மாவட்டத்தின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.