Hindu Tamil Thisai
பள்ளிகளில் விண்வெளி பாடம் இடம் பெற வேண்டும்: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் யோசனை
சென்னை: பள்ளி அறிவியல் பாடத்தில் விண்வெளி தொடர்பான பாடமும் இடம்பெற வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் யோசனை தெரிவித்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ரஷ்யாவை சேர்ந்த யூரி காகரின் ஆவார். ரஷ்ய நாட்டின் நிதியுதவியுடன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வாளகத்தில் யூரி காகரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்மையத்தின் செயல் இயக்குநர் கே.சண்முக…